பல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் ?

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. இதனாலேயே ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன.


பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அது தான் கௌளி சாஸ்திரம்.
பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது. 
பல்லி நம் உடல மீது எங்கு விழுந்தாள் என்ன பலன்
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு 
கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி