விநாயகருக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

வைகாசி மாதம் சுக்கில பட்சத்து முதல் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். விரதம் அன்று பகல் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து மாலையில் மறுபடி நீராடி விநாயகரை வழிபட்டு ஏதாவது பழங்களை சாப்பிடலாம். இவ்விரதத்தை மேற்கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 5 மணிக்கு முன் புனித நதியில் நீராடி, 

அல்லது புனித நதியின் பெயரை மனதால் நினைத்து கலச ஸ்தாபனம் செய்து, கும்பத்தில் விநாயகரைப் பூசித்து, கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து கவசம் படிப்பதும், மகேஸ்வர பூஜை செய்து அடியார்களுடனிருந்து உண்ணுதல் வேண்டும். இதனால் நிதி வசதி பெருகும். குபேரன் வெள்ளிக்கிழமை விரதம் இருந்துதான் பதுமநிதி, சங்கநிதி என்ற உயர்வான நிதிகளைப் பெற்றார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி