தெய்வ ஸ்லோகங்களை டி.வி.டி பிளேயரில் ஒலிக்கவிட்டுக் கேட்பதால், உரிய பலன் கிடைக்குமா?

!புனிதமான ஸ்லோகங்கள், நம் வாய் மொழியாக... வேத கோஷமாக வெளிவர வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும்போது... எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, நம் மனம் தேசியகீதத்தில் ஒன்றிவிடும். காரணம், உயிரினும் மேலாக தேசியகீதத்தை நாம் மதிக்கிறோம். அதுபோல, எழுதாக் கிளவியாகிய வேதத்தின் ஸ்லோகங்களையும் நாம் போற்ற வேண்டும்.

‘வேத கோஷத்தில்... வேத ஸ்லோகங்களை உச்சரிக்கும்போது, எத்தனை எழுத்துகள் வெளிப்படுகின்றனவோ, அத்தனை முறை பரம்பொருளின் திருநாமத்தை (ஹரி நாமத்தை) சொன்ன பலன் கிடைக்கும்’ என்கிறது தர்ம சாஸ்திரம் (யாவந்தி வேதாக்ஷராணி...).

சங்கீதக் கச்சேரி, காலட்சேபம் மற்றும் திரைப்பாடல்கள் முதலானவற்றை டேப் ரெக்கார்டர் அல்லது சி.டி. பிளேயரில் ஒலிக்க விட்டு, அவற்றைக் கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால் வேத ஸ்லோகங்களைக் கேட்பதில், இந்த அணுகுமுறை கூடாது. வேதம் கற்பதற்கும், வேத ஸ்லோகங்களை உச்சரிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை வேதமே விதித்திருக்கிறது. இதை, கடைச் சரக்காக மாற்றுவதில் தர்ம சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.

அதே நேரம்... தங்களின் ஆதங்கமும் புரிகிறது. வேதம் கற்க இயலவில்லை; வேதம் ஓதுவோரை அழைத்து வேதம் ஓதச் செய்து கேட்கலாம் எனில்... அதற்குப் பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை. ஆகவே, ஸ்லோகங்களை சி.டி-க்கள் மூலம் கேட்க ஆசைப்படுகிறீர்கள். உங்களின் ஆர்வம், ‘விஞ்ஞானத்தின் உதவியால் வேதம் கேட்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் தவறில்லை’ என்பதாக எண்ணி இப்படிச் செயல்பட வைக்கிறது. தங்களின் ஆர்வத்தின் பொருட்டு, இறைவனின் திருநாமங்கள் அடங்கிய சி.டி-க்களைப் பயன்படுத்துங்கள். அதற்கேற்ற அளவில் பயன் உண்டு!

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி