அரசியல் களத்தில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் முந்தபோவது யார்?

ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல் பட முடியாத நிலை ஆகிய வற்றால் தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கே இவர்கள் இருவரும் களம் இறங்கியுள்ளனர்.
சினிமாவில்  போட்டி போட்டுக்   கொண்டு நடித்து புகழின் உச்சியை தொட்ட ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அரசியல் களத்திலும் கால் பதித்துள்ளனர். 

இவர்களில் ரஜினி மீது நீண்ட காலமாகவே அரசியல் பார்வை விழுந்து இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற எதிர் பார்ப்புகளுக்கு இப்போது தான் ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே நேரத்தில் கமல் மீது எந்தவிதமான அரசியல் பார்வையும் எப்போதும் வீசப்பட வில்லை. அவர் திடீரென அரசியலில் குதித்தார்.

ரஜினிக்கு முன்பே தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட கமல், அதற்கான அடித்தளத்தையும் போட்டார். ‘மையம் விசில்’ என்கிற செயலியையும் அறி முகம் செய்து வைத்தார். மக்கள் பிரச்சினைகளுக் காக குரல் கொடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த விசிலை அடிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாக பதி விட்டு வந்த கமல் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கமல் வருகிற 18-ந்தேதி அது தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவேன் என்றும் அறிவித் துள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தின் போது ரசிகர்கள், பொது மக்களை சந்திக்கும் கமல் பொதுக்கூட்டங்களிலும் பேச    திட்டமிட்டுள்ளார். தான் தங்கும் ஓட்டல்களில் ரசிகர்களை  முதலில் சந்திக்கும் அவர் பின்னர் பொதுமக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளார். 

சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்க வும் ரசிகர்களுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுப்பயணத்தின்போது, அந்த பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

சுற்றுப்பயணத்தை எங்கி ருந்து தொடங்குவது? எந்த வகையில் பொதுமக்களை சந்திப்பது என்பது பற்றிய விவரங்களை  நாளை மறுநாள் கமல் அறிவிக்கிறார். முதல் கட்டமாக சில மாவட் டங்களில் மட்டும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை கமல் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.இந்த சந்திப்பு முடிந்த பின்னர் கமலின் அடுத்தடுத்த சந்திப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல் புதிய கட்சி தொடங்குவதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.கமல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் பட்சத்தில் அது ரஜினிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் பின்னர், ரஜினியும் கட்சி, கொடி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். இதனால் விரைவில் மீண்டும் இரு துருவ அரசியல் தமிழகத்தில் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. ரஜினியும், கமலும் அரசியல் களத்தில் இறங்கும் பட்சத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அவர்கள் மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஜினி கமலின் அரசியல் பிரவேசம் தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி