100 கோடி ரூபா செலவில் நாடாளுமன்றம் மறுசீரமைப்பு!!

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியானது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 கோடிரூபா செலவில் மறுசீரமைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய அமைச்சரவைப் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுசெயலர் தம்மிக திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயில் கதவுகள், மலசல கூடம், நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன மறுசீரமைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி