வடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்!!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்து 200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் எனத் தெரியவருகிறது.

தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 683 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியமர யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 350 குடும்பங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 200 குடும்பங்கள் தயாராகி வருகின்றனர்.

மீள்குடியமரவுள்ள மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிட்டு அந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரி வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி