இராட்சத விமானம் தரையிறங்கியதால் 13 மில்லியனுக்கும் அதிக இலாபம்!!


உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமாகிய Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய குறித்த விமானம் இன்று அதிகாலை கராச்சி நோக்கி புறப்பட்டுள்ளது.

மலேசியாசின் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் நோக்கி சரக்குகளை ஏற்றிச் சென்ற போது எரிபொருள் நிரப்புவதற்காக மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதால் இலங்கைக்கு ஒரே நாளில் 13 மில்லியனுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதறக்காக ஊழியர் சபையினர் வசதி ஏற்படுத்தி கொடுத்தமையினால் இந்த பணம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி