ஹஷீஸ் எனும் 14 இலட்ச பெறுமதியுடைய போதைபொருள் மீட்பு!!

ஸ்பெய்ன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹஷீஸ் எனும் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் நேற்று  இந்தப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என சுங்கத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

நீர்ச்சருக்கு பலகை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்குள் இந்த போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனக் கூறப்பட்டது.

கொழும்பு மத்திய தபால் நிலையத்துக்கு உபகரணங்களை பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளபை் பொலிஸார் மேற்கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி