பல்­க­லை பேர­வைக்கு உறுப்­பி­னர்கள் நிய­மனம்!

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பேர­வைக்கு 15 பேர் கொண்ட உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது பற்­றிய அறி­விப்பை பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­குழு தொலை­ந­கல் மூல­மாக அறி­வித்­தது என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

கடந்த பேர­வை­யில் ஒரு­வ­ராக இருந்த சிங்­கள உறுப்­பி­னர் எண்­ணிக்கை இந்­தத் தடவை இரு­வ­ராக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
புதிய பேர­வை­யில் 6 பேர் புதி­ய­வர்­கள். ஏனைய 9 பேரும் கடந்த பேர­வை­யில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­கள்.

பேரா­சி­ரி­யர் சிவ­யோ­க­நா­தன், கொழும்பு பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­ஜெ­ய­தேவ உயங்­கொட, வண.ஜெரோ செல்­வ­நா­ய­கம், எஸ்.விஷ்­னு­காந்­தன், யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் மருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி மற்­றும் பி.ஈஸ்­வ­ர­தா­சன் ஆகி­யோர் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மனோ­சே­க­ரம், எந்­திரி டி.கே.பி.யூ.குண­தி­லக, மருத்­து­வர் பூ.லக்ஸ்­மன், பேரா­சி­ரி­யர் எஸ்.சிவ­சே­க­ரம், பேரா­சி­ரி­யர் எஸ்.எச்.ஹிஸ்­புல்லா, அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சாந்தா அபி­மன்­ன­சிங்­கம், கலா­நி­தி­ஆறு.திரு­மு­ரு­கன், வி.கன­க­ச­பா­பதி, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் மற்­றும் பி.ஈஸ்­வ­ர­தா­சன் ஆகி­யோர் மீள­வும் உறுப்­பி­னர்­க­ளா­கத் தெரிவு செய்­யப்­பட்டு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

‘‘யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­க­ளாக இருந்த பின்­னர் பேரவை உறுப்­பி­னர்­க­ளா­க­வும் இருந்­த­வர்­களை மீண்­டும் நிய­மிக்­கக்­கூ­டாது என்ற கோரிக்கை பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் முன்­வைக்­கப்­பட்­டது. அதன்­படி சிலர் முன்­னைய வரு­டங்­க­ளைப் போன்று இந்­த­முறை அத்­த­கை­ய­வர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை’’ என்று துணை­வேந்­தர்­ தெ­ரி­வித்­தார்.

பேர­வை­யின் அமர்வு எதிர்­வ­ரும் மே 12ஆம் திகதி நடத்­தப்­ப­ட­லாம் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி