20 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

20 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவர், கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 18ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போதிலும், அங்கிருந்து அவர் தப்பிச்சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் குறித்த பெண் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த வங்கியில் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்டார்.

எனினும், அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு அமைய, சந்தேகநபர் கேகாலை பிரதேசத்தில் தங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி