எதிர்வரும் 24 இல் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு!!

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான மிக முக்கியமான சந்திப்பு எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசயில் நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் சந்தித்து பேசவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக அரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக ஆளும் தரப்புடன் கட்சியின் வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சுதந்திரக் கட்சித் தரப்பினருடன் ஜனாதிபதி உடனடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடவுள்ளனர். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆராயப்படவுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி