நல்லடக்கம் செய்யப்பட்டு 25 நாட்களின் பின் உயிருடன் திரும்பிய பெண்!!

நுவரெலியாவில் பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு, குறித்த சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் உயிருடன் வந்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணை காணவில்லை என கடந்த மார்ச் 24 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி களுகங்கையில் இருந்து அடையாளம் தெரியாத சடலமொன்றை பொலிஸார் மீட்டு நாகொடை வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்தனர்.

இந்த சடலம் தனது மகளுடையது என காணாமல் போன பெண்ணின் தந்தையார் அடையாளம் காட்டியுள்ளார்.

தொடர்ந்து குறித்த சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் 25 நாட்களின் பின் வீடு திரும்பியுள்ளார்.

28 வயதுடைய குறித்த பெண் அவரது குழந்தையுடன் காணாமல் போயிருந்த நிலையில், திரும்பி வரும் போது குழந்தையுடனேயே வந்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக நபரொருவருடன் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி நுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் குறித்த இளைஞருடன் தங்கியிருந்ததாக குறித்த பெண் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி