வடக்கில் 48,632 குடும்பங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு!!

வட மாகாணத்தில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சி நிலை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 48,632 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாவட்டங்களில் தொடரும் வறட்சி நிலை காரணமாக கிணற்று நீர் நாளுக்கு நாள் குறைவடைந்து வற்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இதனால் பொதுமக்கள் குடிநீரை பெற்றுக் கொள்முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி