50 இற்கும் அதிகமான உணவகங்களில் பரிசோதனை!!

மட்டக்களப்பு நகரில் 50 இற்கும் அதிகமான உணவகங்கள் நேற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

சுத்தமான, நல்ல பழுதடையாத உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சுகாதார அமைச்சினால், இத் திட்டம் மேற்கொள்ளப்ட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

காலவதியான உணவுப் பதார்த்தங்கள், மரக்கறிகள் மற்றும் குளிர்பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், தொடர்புபட்ட உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி