தொடருந்துச் சேவையால் 65 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்!!

கடந்த சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெற்ற தொடருந்துச் சேவைகள் மூலம் 65 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப் பெற்றது என்று தொடருந்துத் திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே.இத்திபொலகே தெரிவித்துள்ளார்.

கடந்த திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பதியில் சிறப்புத் தொடருந்துச் சேவைகள் இடம்பெற்றன. அனைத்து தொடருந்துத் நிலையங்களிலும் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை வருமானம் கிடைக்கப் பெற்றது.

பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் மீண்டும் சிறப்புத் தொடருந்துத் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி