72 வயதிலும் இளமையாக சுற்றித்திரியும் மஹிந்த ராஜபக்ஷ!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியாவில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

72 வயதானாலும் மிகவும் இளமையாக நுவரெலியாவில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த நாட்களில் நுவரெலியாவில் ஓய்வெடுத்து வரும் மஹிந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நுவரெலியா கிரகரி ஏரிக்கு அருகில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு மஹிந்த மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நுவரெலியாவில் சுற்றுலா பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி