90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய மொரகஹகந்தை நீர்மின் உற்பத்தி நிலையம்!

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் நீர்மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் மார்ச் மாதம் 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கடைசி நீர்த்தேக்கமான மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் மூலமாக நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மொரகஹகந்தை நீர்மின் உற்பத்திநிலையத்தின் மூலமாக இம்மாதத்தில் மட்டும் தற்போதைக்கு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக ஒரே தடவையில் 25 மெகாவொட் மின்சாரத்தை தேசிய மின்பகிர்மான தொகுதிக்கு வழங்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வருடமொன்றுக்கு குறைந்த பட்சம் 154 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதும் மொரகஹகந்தை நீ்ர் மின் உற்பத்தி நிலையத்தின் இலக்குகளில் ஒன்றாகும்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி