வாக்காளர் பதிவு மையத்தில் வெடிகுண்டு தாக்குதல்!! 9 பேர் பலி!!!

தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றுக்குத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாத, தான் கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளளர். 56 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி