நாடாளுமன்ற அமர்வுக்கான திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் விரைவில்!!

மே மாதம் இரண்டாம் திகதி கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்கான திட்டமிடல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மே 8ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு இரண்டாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என நேற்று வெளியிடப்பட்ட இரண்டாவது வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வைபவ ரீதியாக இரண்டாவது அமர்வு நடத்தப்பட உள்ளது. கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் சட்டசிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. நாடாளுமன்றம் கூடும் நேரம் இதில் குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில் நேற்று இரண்டாவது வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி