பாடசாலை மாணவிக்கு பள்ளியில் மர்மநபர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!

பாடசாலை மாணவி ஒருவரை அறைக்குள் அழைத்து சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பாடசாலை ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றது.

மேலதிக வகுப்பு ஒன்றுக்காக தரம் 8 மாணவர்கள் அழைக்கபட்டிருந்த நிலையில் வகுப்பு இல்லையென அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மைதானத்தின் வழியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவியை, அப் பாடசாலையில் கட்டடப் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் உணவு தருவதாகக் கூறி அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அதிபர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் இணைந்து சிறுமியை மீட்டதோடு, சந்தேக நபரை பிடித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கண்டி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே பொலிஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்.மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார மருத்துவமனையில சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி