தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி!!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்கான புதிய உடன்படிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடனபடிக்கையை தயாரிப்பதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி பெயரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் தேசிய அரசாங்கத்திற்கான புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி