கொழும்பு நகர பரப்பளவில் பாரிய மாற்றம்!!

கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் போர்ட் சிட்டி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்தார்.

போர்ட் சிட்டி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நில அளவை திணைக்களம் அளவீட்டுப் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரைபடத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் நில அளவையாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலப்பரப்பை சட்டரீதியாக்கும் பொருட்டு அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த பணிகளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும்.

போர்ட் சிட்டி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி