மூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்!!!

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் இதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களே குறித்த அபாயம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி