மத்தள விமான நிலையத்தில் டன் கணக்கில் நெல் மூட்டைகள்!!

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் டன் கணக்கில் நெல் மூட்டைகளை குவித்து வைத்திருப்பதால் விமான நிலையத்தின் மதிப்பு கெட்டுவிட்டதாக விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் வந்திறங்கிய பின்னர், மத்தள நெல் மண்டியில் உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளது என்றே பொதுமக்கள் பேசி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையமானது சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் நல்ல பெயரை சம்பாதித்த ஒரு விமான நிலையமாகும். ஆனால் இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

டன் கணக்கில் நெல் மூட்டைகளை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேறும் தூசியால் நுணுக்கமாக கையாள வேண்டிய பல கருவிகளும் பாழாகியுள்ளது.

இதற்கான அனைத்து செலவினங்களும் அரசே பொறுப்பேற்று ஈடு செய்ய வேண்டும். 2016, ஜனவரி 16 ஆம் திகதியே நெல் மூட்டைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

என்றபோதும் அதனால் ஏற்பட்ட அவப்பெயர் இன்னும் விலகவில்லை என்றார் அந்த உயர் அதிகாரி.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி