புரட்சிப் படையோடு நடைபோடு

புரட்சிப் படையோடு நடைபோடு
_______________________

சுடும் தணலில் வீரம்.
விடும் பொறியில் ஈரம்.
தடையதை தகர்த்துடை
தமிழே எம் பெரும் படை
புரட்சிக்கு ஏதிங்குதடை
எழுச்சியில் எழுவதே நம் நடை !
தாயகம் மீதினில்
கொள்கைத் தாகம்.
தமிழ் மடி சாய்வதே
எம் வேட்கையின் வேகம்.
சாதியை வீசு
சாக்கடைத் தெருவில்.
சந்ததி காப்பாய்
சரித்திர உருவில்.
ஒடிந்து மண்ணில்
உருகிடலாமோ ?
வடிந்த குருதியை
நீ மறந்திடலாமோ !
எழுந்து வாடா
எரிமலைத் தோழா.
விடியும் பொழுதில்
மடியும் உடலை
முடியும் நதியில்
படியும் மடலை
வெளியில் நின்று
ரசித்திடலாமோ ?
உலகே பகையென
தூக்கி எறியும்
விலைகள் பேசி
தூற்றி வீசும்
சரிந்திடலாமோ ?
தாய்மை ஊட்டிய
வீரமுண்டு பயமேது
தந்தை காட்டிய
வரமுண்டு தவறேது
அநீதி எதிர்த்துப் போராடு !
அண்டம் கலங்க நீயோடு
கொள்கை வீரம்
வெற்றி பெறட்டும்
தமிழர் புகழ் எங்கும் பிறக்கும்.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி