பிரித்தானிய சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாட்டு விதிகள்!!

பிரித்தானியாவின் சுகாதாரத்துறை செயலாளர் Jeremy Hunt, சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை சிறுவர், சிறுமியர் அதிக அளவு பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இதனைத் தடுக்க, பிரித்தானியாவின் சுகாதாரத்துறை செயலாளர் புதிய வரைவு கொள்கைகளை முன்வைத்துள்ளார்.

அதன்படி, 13 வயதுக்கு மேற்பட்டவர்களே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் போன்ற சமூக வலைதளங்களில் உள்நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

அதேபோல, வாட்ஸ் அப் அல்லது யூடியூப்பில் கணக்கு தொடங்கவும் வயது வரம்பு 13-ற்கு மேல் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவனம், அரசின் பொறுப்பை தாங்கள் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக Jeremy Hunt, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனையை சமூக வலைதள ஊடக நிறுவனங்களிடம் நடத்தினார்.

இந்நிலையில், தற்போது அவர் விதித்துள்ள புதிய விதிகள் தொடர்பாக கூறுகையில், ‘பல சூடான வார்த்தைகளும், சில வரவேற்பு நடவடிக்கைகளும் ஒன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளன.

யாரும் உணர முடியாது என்பது போன்ற எளிய வழிகள் எதுவும் இல்லை. ஆனால், சில நிறுவனங்கள் பிரகாசமான மூளைகள் மற்றும் பெரிய திட்டங்களும் கண்டிப்பாக சவால்களை எழுப்பும்.

உங்களது ஆயிரக்கணக்கான பயனர்கள், உங்கள் நிறுவனத்தின் சொந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை குறைந்த அளவில் பயன்பெறும் போது மீறுகின்றனர் என்பதை எண்ணி நான் கவலையடைகிறேன்.

ஒட்டுமொத்த குழந்தைகள் தலைமுறையும் ஒரு குருட்டுத்தனமான சமூக வலைதள தாக்கத்தினால், உரிய காலத்திற்கு முன்பே பாதிக்கப்பட்டு தீய விளைவுகளை அனுபவிப்பதாக நான் அஞ்சுகிறேன்.

இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் தங்களது தோழமையை தேடுவதற்கு இது அடித்தளமாக இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்த அணுகுமுறை ஒவ்வொருவரின் தனித்துவமான தெரிவைப் பொறுத்து அமைவதால் தார்மீக அடிப்படையில் தவறாகவும், நியாயமற்றதாகவும் அமைகின்றன.

இவை, பெற்றோர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பொறுப்பற்ற நிலையில் வைப்பதாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி