பொலிஸாரினை வெளியேற்றிய மாநகர முதல்வர்!!

மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் நேற்று நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்டனர். அதனை அவதானித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார் என்று கூறப்படுகிறது.

அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவு செய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாருங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி