சாட்டையடிக்_கோபமுண்டு

சாட்டையடிக்_கோபமுண்டு
____________________________
சட்டங்களில் கோபமில்லை
சட்டத்தைக் காப்பவர்கள் மீது
சாட்டையடிக் கோபமுண்டு
பட்டம் பெற்று பதவியெடுத்து
சட்டம் கற்று சாட்டையெடுத்து
வீதியில் மறைந்திருந்து
மயில்த்தாள் பறித்து
மதியிழந்த குயில்களைப் போல
புலம்பித் திரிவது சட்டமா ?
நீதித்தாய் கண்களை மறைத்து
கையாளும் நிதி வேண்டி
காக்கியுடையில் கலவரம் தீண்டும்
காவல் நீதிக்கு ஏது தண்டனை
சட்டம் என்பது நடு வீதியில் நின்று
அசிங்கப் படுத்துவதோ
ஐந்தறிவு ஜீவன் அறிவுக்கு
எம் சட்டம் தோற்றதுவே
நீதித்துறையில் விரிவு வேண்டும்
நாட்டைக் காப்பாற்ற
பதவி போதுமா பகுத்தறிவும் வேண்டும்
வெள்ளைக் கொடிகள்
மேடையில் பரவிட பாதுகாப்பு
அரண் அமைத்து வழி காக்கும்
நீங்கள் பாமரன் வழியதை
மறந்துவிடுவதும் ஏனோ
தெருவில் தெருக்கூத்து
வெளியில் வெள்ளாட்டமா
எதிர்க்கும் வீரம் எம்மிடமுண்டு
கொட்டும் மழையும் தட்டிப்பாடும்
ஒதுங்கும் மனம் தட்டிக் கேக்கும்
ஐந்தறிவு மேன்மை
ஆறாம் அறிவையும் தாண்டிய
எம் சட்டம் காப்பவர்களிடம்
இல்லையோ என்று எம் மனம்
ஏங்கித் தவிக்கிறது

வன்னியூர் கிறுக்கன்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி