வலி.தென் ­மேற்கில் இரு சபைகள்!

வலி.தென் ­மேற்கு பிர­தே­சம் பரந்த பிர­தே­ச­மா­கக் காணப்­ப­டு­கின்­ற­மை­யால் மானிப்­பாய் நக­ர­ச­பை­யா­க­வும், பண்­டத்­த­ரிப்பு பிர­தே­ச­ச­பை­யா­க­வும் இரண்டு பரந்த கட்­ட­மைப்­புக்­க­ளைக் கொண்­ட­தாக மாற்­றம் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.

இதனை விரிவு படுத்தும் முக­மாக எம­து­செ­யற்­பா­டு­கள் அமை­ய­வேண்­டும். இதற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் செய­லா­ள­ரும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் துணை நிற்க வேண்­டும். இவ்­வாறு வலி.தென்­மேற்கு பிர­தே­ச­ச­பைத் தவி­சா­ளர் அ.ஜெப­நே­சன் தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது;
எமது பிர­தே­சத்­துக்­குட்­பட்ட வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்­கான வீதி­கள் பல நீண்ட கால­மா­கச் சீர­மைக்­கப்­ப­டா­மல் உள்­ளன. சங்­க­ரத்தை வீதி, காக்­கை­தீவு அராலி வீதி என்­பன நீண்ட கால­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வில்லை. இவற்­றுக்­கான அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் தற்­பொ­ழுது வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மானிப்­பாய், பண்­டத்­த­ரிப்பு ஆகிய பிர­தே­சங்­க­ளில் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளன. எமது பிர­தே­சத்­துக்­குட்­பட்ட மைதா­னங்­க­ளும் பிர­தேச மக்­க­ளின் தேவைக்கு மட்­டு­மன்றி நக­ர­ச­பை­யா­கத் தர­மு­யர்த்­து­வ­தற்கு அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யுள்­ளது.

எமது பிர­தே­சத்­துக்­கான குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­ னைக்கு பல கோடி ரூபா செல­வில் இர­ணை­ம­டுத் திட்­டத்­தின் கீழ் நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்பு அதி­கார சபை­யி­னால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­பொ­ழுது பிர­தேச சபை­யி­னால் பெரி­ய­வி­ளான், மாத­கல், பண்­டத்­த­ரிப்பு போன்ற இடங்­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கத் தெரிவு செயற்­பட்ட நாம் ஒரு வருட காலப்­ப­கு­திக்­குள் எமது செயற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்தி தீர்வு காண­வேண்­டும். மக்­க­ளின் நலன் கருதி முக்­கி­ய­மான சந்­தை­க­ளா­கக் கரு­தப்­ப­டும் மானிப்­பாய், பண்­டத்­த­ரிப்பு ஆகிய பொதுச்­சந்­தை­கள் சுகா­தார வச­தி­க­ளு­டன் கூடிய பெரிய சந்­தை­க­ளாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டும்.

இத­னால் சபை­யின் வரு­மா­னத்­தைக் கணி­ச­மான அளவு அதி­க­ரிக்க முடி­யும் மக்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் கட்சி பேத­மின்றி ஒரு­மித்து உழைக்க வேண்­டும் என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி