சமுர்த்தி பயனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வு!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் சமுர்த்தி பயனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வொன்று மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறப்பு விருந்தினராக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எஸ்.சந்திரகுமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

வங்கியின் முகாமையாளர் இ.இரட்ணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல நடைபெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி