கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி!!

ரஷ்யாவில் உள்ளூர் லீக் கால்பந்து போட்டியை கரடி தொடங்கி வைத்ததற்கு, விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூன்றாவது Division லீக் கால்பந்து போட்டியில் Mashuk-KMV மற்றும் Angusht அணிகள் மோதின.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ரஷ்ய நாட்டின் அடையாளமாக உள்ள கரடி ஒன்று போட்டி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டது.

Tim எனும் பெயருடைய அந்த கரடி போட்டியை தொடங்கி வைக்கும் வகையில், கால்பந்தினை நடுவரிடம் வழங்கியது. மேலும், கைதட்டி மகிழ்ந்தது.

இந்நிலையில், கரடி போட்டி தொடங்கி வைத்ததற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி