படை­யி­னர் வச­முள்ள காணி­க­ளின் அள­வைக் குறைத்து பொய்­யான தக­வல்­களை வழங்­கும் அரசு!!

முல்­லைத்­தீவு மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் வச­முள்ள காணி­க­ளின் ஏக்­கர் அள­வைக் குறைத்து, இந்த அரசு பன்­னா­டு­க­ளுக்கு பொய்­யான தக­வல்­களை வழங்­கி­வ­ரு­கி­ற­தா­கவே எண்­ணத்­தோன்­று­கி­றது.

இது அர­சின் ஆரோக்­கி­ய­மான செய­லல்ல. இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம், து.ரவி­க­ரன் ஆகி­யோர் விச­னம் தெரி­வித்­த­னர். பன்­னா­டு­க­ளி­லி­ருந்து அரசு தப்­ப­வேண்­டும் என்­ப­தற்­காக அரசு இப்­ப­டிச் செய்­யக்­கூ­டாது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

வவு­னியா நிலை தொடர்­பில் உறுப்­பி­னர் சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­த­தா­வது:

வவு­னியா மாவட்­டத்­தில் படை­யி­னர் வச­முள்ள நிலம் 7 ஆயி­ரத்து 504 ஏக்­கர் என்று தேசிய நல்­லி­ணக்க செய­ல­ணி­யும், ஆயி­ரத்து 872 ஏக்­கர் நிலம் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சும் மாறு­பட்ட தக­வல்­க­ளைக்­கூறி பன்­னா­டு­களை வேண்­டு­மென்றே திசை திருப்­பு­வ­தா­கவே எண்­ணத்­தோன்­று­கின்­றது.

“வவு­னியா மாவட்­டத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் பிடி­யில் 68.46 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 5 ஆயி­ரத்து 864.07 ஏக்­கர் அரச காணி­யும் உள்­ளது. கடற்­ப­டை­யி­னர் வசம் எந்த நிலங்­க­ளும் கிடை­யாது. விமா­னப் படை­யி­னர் வசம் தனி­யார் காணி­கள் கிடை­யாது 1571.60 ஏக்­கர் அரச காணி­யு­மாக மொத்­தம் 68.46 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும 7 ஆயி­ரத்து 435.67 ஏக்­கர் அரச காணி­க­ளு­மாக மொத்­தம் 7 ஆயி­ரத்து 504.13 ஏக்­கர் நிலம் மட்­டுமே படை­யி­னர் வசம் உள்­ளது” என்று தேசிய நல்­லி­ணக்க செய­லணி கடந்த ஆண்டு இறு­தி­யில் வெளி­யி­டப்­பட்ட தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் மாளி­கை­யில் அரச தலை­வ­ரின் செய­லா­ளர் ஒஸ்­ரின் பெர்­னான்டோ தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற நிலம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சோ வவு­னி­யா­வில் ஆயி­ரத்து 872 ஏக்­கர் மட்­டுமே உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளது.

தனி­யார் மற்­றும் அரச காணி­களை விட வன­வ­ளத் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­னது என்ற பெய­ரில் 3 முக்­கிய படை நிலை­கள் உள்­ளன. அவை இங்கே கணக்­கி­டப்­ப­டவே இல்லை. கணக்­கி­டப்­ப­டாத அளவு நிலம் செய­ல­ணி­யால் கூறப்­பட்ட அளவை விட அதி­க­மா­னது.

செட்­டி­கு­ளம் மெனிக்­பாம் பகு­தி­யில் மக்­க­ளின் இடைத்­தங்­கல் முகாம் என்­னும் பெய­ரில் அப­க­ரிக்­கப்­பட்ட 6 ஆயி­ரத்து 200 ஏக்­கர் நிலத்தை படை­யி­னரே ஆளு­கின்­ற­னர். இரணை இலுப்­பைக்­கு­ளம் வனப் பகு­தி­யில் 2 ஆயி­ரம் ஏக்­க­ருக்­கும் அதி­க­மா­ன­வற்­றில் இரா­ணுவ பயிற்சி முகா­மும், மடுக்­க­ரை­யில் 3 ஆயி­ரத்து 100 ஏக்­க­ரில் விமா­னப்­படை முகா­முக்­கா­க­வும் என்று மொத்­த­மாக 11 ஆயி­ரத்து 300 ஏக்­க­ரும் மறைக்­கப்­பட்­டுள்­ளதா? என்ற சந்­தே­கம் எழு­கின்­றது.
இவற்­று­டன் தனி­யார் மற்­றும் அரச காணி­க­ளான 7 ஆயி­ரத்து 504 ஏக்­கர் நிலம் உட்­பட மொத்­த­மாக 18 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நிலம் படை­யி­னர் வசம் உள்­ளது. என்­பதே உண்மை.

அதனை விடுத்து பன்­னா­டு­க­ளுக்­கா­கப் போலி­யா­கத் தயா­ரித்து வெளி­யி­டப்­ப­டும் தவ­றான தர­வு­க­ளால் திசை திருப்ப முய­லவோ அல்­லது வடக்­கில் படை­யி­ன­ரின் பிர­சன்­னம் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் காட்­டவோ முய­லக்­கூ­டாது.

வடக்கு மாகா­ணத்­தில் மட்­டும் படை­யி­னர் 70 ஆயி­ரம் ஏக்­க­ரில் குந்­தி­யி­ருக்க நிரந்­தர வாழ் மக்­கள் கால் ஏக்­கர் அரை ஏக்­கர் நிலத்­துக்கு மாவட்­டச் செய­ல­கத்­துக்­கும் பிர­தேச செய­ல­கத்­துக்­கும் ஆண்­டுக் கணக்­கில் அலை­கின்­ற­னர். வடக்­கில் படை­யி­ன­ரி­டம் 27 ஆயி­ரத்து 230 ஏக்­கர்­தான் உள்­ளது. என்­பது அப்­பட்­ட­மான பொய்”– என்­றார்.

முல்­லைத்­தீவு நிலை தொடர்­பில் உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­த­தா­வது:
பன்­னாட்டு நெருக்­க­டிக்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் படை­யி­னர் வச­முள்ள நிலங்­கள் தொடர்­பில் அர­சின் சகல இயந்­தி­ரங்­க­ளுமே திட்­ட­மிட்டு மூடி மறைத்து பெயர் எடுக்க முனை­கின்­ற­னரா என்ற சந்­தே­கம் எழு­கி­றது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான ஆயி­ரத்து 150 ஏக்­கர் நிலம் மட்­டுமே தற்­போது படை­யி­னர் வச­முள்­ள­தாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அரச தலை­வர் செய­ல­கத்­துக்­கு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. அதே­நே­ரம் தேசிய நல்­லி­ணக்கச் செய­ல­ணியோ 9 ஆயி­ரத்து 148 ஏக்­கர் நிலங்­கள் உள்­ள­தா­கக் கடந்த ஆண்டு தெரி­வித்­தி­ருந்­தது.

தேசிய நல்­லி­ணக்கச் செய­லணி வெளி­யிட்ட தக­வ­லில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் 540.29 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 6 ஆயி­ரத்து 934.38 ஏக்­கர் அரச காணி­களும் உள்­ள­து­டன் கடற்­ப­டை­யி­னர் வசம் 671 ஏக்­கர் தனி­யார் காணி­களும் 44.80 ஏக்­கர் அரச காணி­யும், விமா­னப் படை­யி­னர் வசம் 958 ஏக்­கர் அரச காணி­யு­மாக மொத்­தம் ஆயி­ரத்து 211.29 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 7 ஆயி­ரத்து 937.18 ஏக்­கர் அரச காணி­யும் உள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 60 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் அர­சால் விழுங்­கப்­பட்டு விட்­டது. இந்த நிலை­யில் 60 ஆயி­ரம் ஏக்­க­ரில் படை­யி­னர் வசம் மட்­டும் 40 ஆயி­ரம் ஏக்­கர் வரை­யில் உள்­ளது.

படை வச­முள்­ள­தாக நல்­லி­ணக்கச் செய­லணி கூறிய 9 ஆயி­ரத்து 148 ஏக்­கர் நிலங்­கள் தனி­யா­ருக்­கும் அர­சுக்­கும் சொந்­த­மா­னவை. கேப்­பா­பி­ல­வில் மட்­டும் சிறு­ப­குதி நிலம் விடு­விக்­கப் பட்­டது.

ஒட்­டு­சுட்­டா­னின் அம்­ப­கா­மம் பகு­தி­யில் 8 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நிலத்­தில் விமா­னப் படை­யி­ன­ரும், கரிப்­பட்­ட­மு­றிப்பு காட்­டுப்­ப­கு­தி­யில் 2 ஆயி­ரத்து 500 ஏக்­க­ரில் விமான நிலை­யத்­து­ டன் கூடிய முகா­மும் , ஏ9 வீதி­யில் முறி­கண்­டி ­யில் 2 ஆயி­ரம் ஏக்கர் நிலத்­தில் இரா­ணுவ முகா­மும், கேப்­பா­பி­ல­வில் பொது­மக்­க­ளின் நிலத்­துக்கு அப்­பால் 2 ஆயி­ரத்து 200 ஏக்­கர் வனப்­ப­கு­தி­யில் விமா­னப்­படை முகாம் உள்­ளது.

நில ஆக்­கி­ரமிப்­புத் தொடர்­பில் கூட்­ட­மைப்­பால் வெளி­நா­டு­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட ஆவ­ணங்­க­ளில் இவை தொடர்­பில் தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டது. அதை மூடி மறைக்­கும் நோக்­கில் வேண்­டு­மென்றே வெளி­யி­டப்­பட்ட அர­சி­யல் கலப்­புள்ள புள்­ளி­வி­வ­ரங்­க­ளா­கவே இத­னைப் பார்க்­கின்­றோம் – என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி