பிரான்ஸ் ஜனாதிபதியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கருத்து கணிப்பு!!


பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் பிலிப்பின் செல்வாக்கு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் Notre-Dame-des-Landes கலவரம் SNCF ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல அரசியல் சிக்கல்கள் அரசு சந்தித்து வந்தது.

இருப்பினும் தற்போது ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் பிலிப் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக ஒரு புதிய கருத்துகணிப்பு வெளியாகியுள்ளது.

iFop எனும் நிறுவனம் எடுத்துள்ள மாதாந்திர கருத்துக்கணிப்பில் மேக்ரானுக்கு 2 புள்ளிகளும் பிரதமர் பிலிப்பின் 2 புள்ளிகளும் ஏப்ரல் மாத கருத்துகணிப்பில் அதிகரித்துள்ளது.

இப்போதைய நிலவரப்படி மேக்ரான் 44 புள்ளிகளுடனும் எத்துவா பிலிப் ஒரு புள்ளி அதிகமாக 45 புள்ளிகளுடன் உள்ளனர்.

ஜனாதிபதியாக மேக்ரானின் செயல்பாடு மிகவும் திருப்தி என 5% பேரும் திருப்தி என 39% பேரும் தெரிவித்துள்ளனர். மீதம் உள்ள 32% பேரில் 32% பேர் திருப்தி இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கருத்துகணிப்பு ஏப்ரல் 12 முதல் 21 வரை 18 வயதுக்கு மேற்பட்ட 1,949 நபர்களிடம் இணையம் மற்றும் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி