ஜோதிகா நடிக்கும் அடுத்த திரைப்படம்!!

வித்யா பாலன் நடிக்க, சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த 2017 நவம்பரில் வெளியான இந்திப் படம் ‘துமாரி சுலு’. சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், வானொலி ஒன்றில் பணி புரிகிறார். இதனால் பல பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார். இவ்வாறு நகரும் ‘துமாரி சுலு’ படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதை ராதாமோகன் இயக்க உள்ளார். இதில், வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமானார். ‘மொழி’ வெற்றிப் படத்துக்குப் பின்னர் ராதாமோகன் – ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி