முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினம் நாளை!!

முள்­ளி­வாய்க்­கா­லுக்கு அவர் வர­க் கூ­டாது இவர் வரக் கூடாது என்று கூறி அந்த நாளைக் கொச்­சைப்­ப­டுத்­தா­தீர்­கள். இந்த நிகழ்­வில் அனை­வ­ரும் மக்­க­ளோடு மக்­க­ளாக கலந்­து­கொள்­ளுங்­கள். மற்­ற­வர்­க­ளைக் குறை­கூறி மக்­க­ளின் கண்­ணீ­ரில் அர­சி­யல் செய்து கதா­நா­ய­க­னா­கும் எண்­ணங்­களை விட்­டு­வி­டுங்­கள். இவ்­வாறு தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் கி.கிருஷ்ணமே­னன்.

முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை அனைத்து தமிழ் மக்­க­ளும்
ஒன்­றி­ணைந்து ஒரே நிகழ்­வாக, தமிழ்த் தேசி­யத்தை மீளெ­ழுச்சி கொள்­ளச் செய்­யும் நிகழ்­வா­கக் கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் சில தினங்­க­ளுக்கு முன்­னர் அறை­கூ­வல் விடுத்­தி­ருந்­தது.

ஒன்­றி­யத்­தின் அந்த அறை­கூ­வ­லில் சந்­தே­கம் இருப்­ப­தாக தமிழ் தேசிய மக்­கள் முன்­னை­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் கூறி­யி­ருந்­தார். ஒன்­றி­யத்­தின் இந்த அழைப்பு ‘‘பிழை­யா­ன­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் பிழை­க­ளுக்­கும் வெள்­ளை­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­யாக இருக்­குமோ’’ என்று அவர் சந்­தே­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இனப்­ப­டு­கொ­லைக்கு இறு­தி­வரை துணை­போ­ன­வர்­க­ளும் இனப்­ப­டு­கொலை விசா­ர­ணை­களை நிறுத்த நினைப்­ப­வர்­க­ளும் அதே இனப்◌ப­டு­கொ­லை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் அதன் சாட்­சி­க­ளும் நடந்த இனப்­ப­டு­கொ­லைக்கு நீதி கேட்­ப­வர்­க­ளும் ஒன்­றாக ஒரே இடத்­தில் அஞ்­சலி செலுத்­து­வது அபத்­தம் என்­றும் அவர் விமர்­சித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் ஒன்­றி­யத்­தின் கருத்து என்ன என்று அதன் தலை­வ­ரி­டம் உத­யன் கேள்வி எழுப்­பி­யது. அவர் தெரி­வித்­த­தா­வது:
முள்­ளி­வாய்க்­கால் நினை­வி­டத்­துக்கோ அல்­லது நினை­வு­நா­ளுக்கோ யாரும் உரிமை கோர முடி­யாது.அர­சி­யல் கட்­சி­யாக இருந்­தா­லும் சரி,பொது அமைப்­புக்­க­ளாக இருந்­தா­லும் சரி ஏன் நாங்­க­ளே­கூட அதற்கு உரிமை கோர முடி­யாது.

இந்த நினை­வு­ நாளை அர­சி­யல் கட்­சி­களோ,பொது அமைப்­புக்­களோ தமது சுய இலா­பத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்தி கொள்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முள்­ளி­வாய்க்­கால் நினைவு நாளை­கூட நாம் ஒற்­று­மை­யாக கடைப்­பி­டிக்­காத தரப்­பாக இருக்­கக்­கூ­டாது.

பன்­னாட்­டுச் சமூ­கம் எமக்­கொரு தீர்­வைப் பெற்­றுத்­தர முய­லும் போது நாம் எமக்­குள் பல பிரி­வு­க­ளாக இருப்­பதை நாம் விரும்­ப­வில்லை.அத­னா­லேயே நினைவு தினத்­தி­லா­வது ஒன்­று­ப­டு­மாறு அழைத்­தி­ருந்­தோம். அதில் எவ்­வித வேறு­பா­டு­க­ளும் இருக்­கக் கூடாது என வலி­யு­றுத்தி இருந்­தோம்.அப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலை­யில் அந்த நினைவு நாளுக்கு இன்­னார்­தான் வர­வேண்­டும், என தீர்­மா­னிக்க யாருக்­கும் தகு­தி­யில்லை.

தமிழ் குடி­ம­கன் யாராக இருந்­தா­லும் கலந்து கொள்ள முடி­யும்.அது ஒட்டு மொத்த தமிழ் மக்­க­ளின் நிகழ்வு. அங்கு வந்து அர­சி­யல் கருத்­துக்­களை ஊட­கங்­கள் வாயி­லா­கக் கூறு­வது, நினை­வி­டத்­தில் வைத்து அர­சி­யல் செய்­வது போன்­ற­வற்றை எம்­மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஏனெ­னில் சில அர­சி­யல் தரப்­புக்­கள் முள்­ளி­வாய்க்­கால் நினை­வி­டத்தை வைத்து அர­சி­யல் இலா­பம் தேட முயற்­சிக்­கின்­றன.
முள்­ளி­வாய்க்­கா­லுக்கு அவர் வர­கூ­டாது இவர் வரக் கூடாது என்­று­கூறி அந்த நாளைக் கொச்­சைப்­ப­டுத்­தா­தீர்­கள். இந்த நிகழ்­வில் அனை­வ­ரும் மக்­க­ளோடு மக்­க­ளாக கலந்­து­கொள்­ளுங்­கள். மற்­ற­வர்­க­ளைக் குறை­கூறி மக்­க­ளின் கண்­ணீ­ரில் அர­சி­யல் செய்து கதா­நா­ய­க­னா­கும் எண்­ணங்­களை விட்­டு­வி­டுங்­கள் – என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி