ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்ச!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை தான் எந்த வகையிலும் பொறுப்பேற்க தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எனவும், கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் எவருக்கும் உதவ தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது. கட்சியின் பெயர் பலகை இருந்த போதிலும் கட்சிக்குள் எதுவுமில்லை.

சுதந்திரக் கட்சிக்குள் ஒழுக்கம் இல்லை. வேலைத்திட்டங்களும் இல்லை. கொள்கையும் இல்லை. இதனால், கட்சிக்கு எதிர்கால பயணமும் இல்லை. அப்படியான கட்சி முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சதை முழுமையாக சாப்பிட்டு முடிக்கப்பட்டு விட்டது. சுதந்திரக் கட்சியை தற்போது ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி