கிளிநொச்சியில் புதிதாக உருவான இளைஞர் பேரவை!!

நான்கு இணைத்தலைவர்கள், ஒரு செயலாளர், இரண்டு இணைச் செயலாளர்கள், 24 அமைச்சுக்கள் அடங்கலாக புதிய அமைப்பாக தமிழ் இளைஞர் பேரவை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்க தெரிவுகள் முடிவுற்று நேற்று மாலை நான்கு மணிக்கு கூட்டுறவாளர் மண்டபத்தில் உத்தியோகபூர்வ முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கல்வி மேம்பாட்டுத்துறை, நிதித்துறை,விளையாட்டுத்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறை, ஆய்வுத்துறை, அரசியல்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரதுறை, அனர்த்த முகாமைத்துவத்துறை, இயற்கை வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை, இளைஞர்திறன் விருத்தி துறை, சிறுவர், மகளீர் நலன் மேம்பாட்டுத்துறை, பொறியியல் மற்றும் உட்கட்டுமானத்துறை, வெளிநாட்டுத்துறை, கொள்கை பரப்புத்துறை, மாற்று வலுவுள்ளோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்ப நலன் மேம்பாட்டுத்துறை, புத்தாக்கத்துறை, மொழிகள் மேம்பாட்டுத்துறை போன்ற 24 துறைகளும் இவற்றுக்கான தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், துறைசார் தலைவர்கள் செயலாளர் துணைச் செயலாளர்கள் இணைத்தலைவர்கள் தமது அடுத்தகட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், இந்த அமைப்பில் பொதுச் செயலாளராக முகாமைத்துவப் பட்டதாரி பரமநாதன் குமாரசிங்கமும் இணைத்தலைவர்களாக வைத்தியக் கலாநிதி வசந்தகுமார் அமுதகுமார், பொறியியலாளர் பகீரதன் கஜீவன், ஆசிரியர் தவராசா கேதீஸ்வரன், கல்வியியலாளர் வடிவேல் நகுலேஸ்வரன் மற்றும் துணைச்செயலாளர்களாக வைத்தியக் கலாநிதி சுரேகா சூரியகுமார், இளமாணி விஞ்ஞான பட்டதாரி தனலட்சுமி தனராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தமிழ் இளைஞர் பேரவையில் அரசியல் கட்சி பேதம் இன்றி அனைத்து இளைஞர்களும் இணைந்து கொள்ளமுடியும் எனவும் ஆனால் கட்சியை பிரதிநித்துவப் படுத்தி யாரும் பேரவையில் செயற்பட முடியாது என குறித்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி