அமைச்சரவை மாற்றம் குறித்த ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு!!

அறிவியல் பூர்வமான முறையில் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு 

பலரும் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

பெரும்பாலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் பொறுப்புசார் துறைகள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக மாற்றியமைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். அத்துடன் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற திணைக்களங்களை மட்டும் அந்தந்த அமைச்சுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை விடுத்து ஒட்டுமொத்த அமைச்சரவை மற்றும் அதன் பொறுப்புசார் விடயங்களை முழுமையாக மாற்றியமைத்தால் அதன் மூலம் தற்போதைக்கு அந்தந்த அமைச்சுகளினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநடுவில் கைவிடப் படும் நிலை ஏற்படலாம்.

அவ்வாறான நிலையில் எதிர்வரும் ஒன்றரை வருட காலத்திற்குள்ளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் ஐ.தே.க.வின் மூத்த அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை வௌிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பாக தங்களின் அதிருப்தியை பிரதமரின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரிடம் நேரில் வௌியிட்டுள்ள குறித்த அமைச்சர்கள் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் உரையாடி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி