வடக்கு – கிழக்கு இணைந்­திருந்த காலத்தில் செயற்­ப­டுத்­திய உத்­வே­கம் இன்று இல்லை!

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு மாகாண சபை முறை வரப்­பி­ர­சா­த­மாக கிடைத்­தது. அதனை வடக்கு – கிழக்கு மாகா­ணம் இணைந்­தி­ருந்த போது செயற்­ப­டுத்­திய உத்­வே­கம் இப்­போ­தைய மாகாண சபை நிர்­வா­கத்­தில் இல்லை.

இவ்­வாறு வடக்கு – கிழக்கு மாகாண முன்­னாள் துணை செய­லர் சி.கிருஸ்­ணா­னந்­தன் குற்­றஞ் சுமத்­தி­னார்.

இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ண­னின் நூல் அறி­முக விழா நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமிழ் மக்­க­ளின் பிரச்­ச­னைக்­குத் தீர்­வா­கக் கொண்டு வரப்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடா­கவே மாகாண சபை முறைமை நாட்­டுக்கு கொண்டு வரப்­பட்­டது. நாட்­டில் உள்ள ஏனைய மாகாண சபை­கள் உரு­வா­கு­வ­தற்­கும் இந்த ஒப்­பந்­தமே அடிப்­ப­டைக் கார­ண­மா­கும். இதனை எமது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கூட பெரு­மை­யா­கக் கூறி­யதை நாம் அறி­ய­வில்லை.

ஆரம்­பத்­தில் வடக்கு – கிழக்கு மாகா­ணம் இணைந்து இருந்­தது. அப்­போது இருந்த மாகாண முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள், பிரிக்­கப்­பட்ட கிழக்கு மாகா­ணத்­தில் ஆட்சி செய்த பிள்­ளை­யான் போன்­ற­வர்­க­ளி­டம் இருந்த உத்­வே­கம் இப்­போ­தைய வடக்கு மாகாண அர­சி­டம் இல்லை. இருக்­கின்ற அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தாது விடுத்து விட்டு கொழும்பு அரசு தடை போடு­கின்­றது, அவர்­கள் ஒன்­றை­யும் தரு­கின்­றார்­கள் இல்லை, விடு­கின்­றார்­கள் இல்லை என்­ப­தைக் கூறு­வ­தி­லேயே இருக்­கின்­ற­னர்.

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் கொண்டு வரப்­பட்ட போது இங்­குள்ள அனைத்து தரப்­புக்­க­ளும் எதிர்த்­த­னர். ஆனால் இப்­போது மனம் வருந்­து­கின்­ற­னர். ஏனெ­னில் இந்த ஒப்­பந்­தம் தான் இன்­று­வரை எம்மை வாழ வைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. இப்­போ­தைய எமது ஏக்­கம் மீண்­டும் இந்­திய இரா­ணு­வம் வர­வேண்­டும் என்று பய­ணிக்­கின்­றது.

இந்த நாட்­டில் 13 ஆவது திருத்­தச் சட்­டத்தை சிங்­க­ளப் பேரி­ன­வாத சக்­தி­கள் உட்­பட முழுத் தரப்­பும் எதிர்க்­க­வில்லை.அனைத்து தரப்­புக்­க­ளும் 13 ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அதி­கா­ரங்­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்றே கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர். இவ்­வா­றான நிலை­யில் அவர்­கள் எமக்கு ஒன்­றை­யும் தர­மாட்­டார்­கள், நம்ப முடி­யாது என்று நம்­பிக்கை இல்­லாத எதிர்­மா­றான சிந்­தனை இருந்­தால் எம்­மால் எத­னை­யும் பெற­மு­டி­யாது.

முன்­னைய காலத்­தில் இந்­தி­யா­வுக்கு எதிரி நாடு­க­ளாக அமெ­ரிக்­கா­வும், பாகிஸ்­தா­னும், இஸ்­ரே­லும் காணப்­பட்­டது. அந்­தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி எமக்­கான தீர்­வி­னை­யும் தனது பாதுக்­காப்­பி­னை­யும் உறு­திப்­ப­டுத்த ஒப்­பந்­தம் இடம்­பெற்­றது.ஆனால் இப்­போது இந்த நாடு­கள் இந்­தி­யா­வு­டன் நட்­பாக இருக்க சீனா என்ற புதிய எதிரி இந்­தி­யா­வுக்கு உரு­வா­கி­யுள்­ளது.

இலங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கத்தை இந்­தியா விரும்­பாது. இந்­தச் சந்­தர்­பத்தை நாம் சரி­யாக பயன்­ப­டுத்­தி­னால் எமக்­கான தீர்­வில் முன்­னேற்­ற­மான இலக்கை அடை­ய­லாம் – என்­றார்.

இந்த நிகழ்­வில் கலந்து கொண்ட வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, பேரா­சி­யர் பொன்.பால­சுந்­த­ரம் பிள்ளை, பொறி­யி­யல் கலா­நிதி க.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் இதே கருத்­துக்­களை முன்­வைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி