பைசர் முஸ்தபா விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்!!

விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும் கலந்து கொண்டார்.

பைசர் முஸ்தபாவுக்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சுடன் மேலதிகமாக விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி