விண்மீன்களின் விழிப்புணர்வு பேரணி!!

விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 'உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நகர்வலமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், நகர்வலம் யாழ்ப்பாணத்தை நோக்கி இன்று காலை வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் கலந்து கையெழுத்திட்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், சமூக அமைப்புக்களின் உட்பட பலரும் இணைந்திருந்தனர்.

இந்த பேரணியானது ஏ9 வீதியூடாக ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம், முருகண்டி, இரணைமடு ஊடாக இன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி