வீடொன்றில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்! குழப்பத்தில் காவற்துறையினர்

கினிகத்தேனை காவற்துறை பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் நேற்று அல்லது நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எனினும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் வீட்டிலிருந்து வெளியே வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்த போது அவர் கீழே உயிரிழந்து கிடப்பதனை கண்டு காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் , சம்பவிடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என கினிகத்தேனை காவற்துறையினரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி