நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!!

நாட்டில் அமைதி சாந்தி சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை தொடர்ந்து மூன்று நாள்கள் இடம்பெற்று சிவனொளிபாதமலையைச் சென்றடையும்.

இந்து சமயத் தொண்டர் சபை, சின்மயா மிசன் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த யாத்திரையை, யாழ்ப்பாணம் நாக விகாரை விகராதிபதி யாழ்ப்பாணம் சின்மயா மிசன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி