யாழினை அழகுபடுத்தும் திட்டம்!

யாழ். மாநகர மேயர் ஆனோல்ட், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது யாழ். மாநகரத்தினை அழகுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மாநகரக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத் திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும், தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர மேயர் ஆனோல்டை, ஆளுநர் கேட்டுக்கொண்டார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி