இட­மாற்­றத்தில் திடீர் தடை!!

வடக்கு மாகாண அமைச்­சுக்­க­ளின் செய­லா­ளர்­களை இட­மாற்­றம் செய்­வது மீண்­டும் தள்­ளிப்­போ­யுள்­ளது. வடக்கு அமைச்­சர்­கள் தாம் விரும்­பு­ப­வர்­க­ளையே தமது அமைச்­சுக்­க­ளுக்­குச் செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்­டும் என்று பிடி­வா­தம் காட்­டு­வ­தால் இந்த நிலமை ஏற்­ப­ட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

இவ்­வாறு அமைச்­சர்­கள் நிய­மிக்­கக் கோரு­ப­வர்­க­ளில் ஒரு சிலர் முறை­கே­டு­கள் தொடர்­பான விசா­ரணை வளை­யத்­திற்­குள் இருப்­ப­த­னால் அவர்­களை முக்­கிய அமைச்­சுக்­க­ளின் செய­ல­ராக நிய­மிப்­ப­தற்கு ஆளு­நர் ரெஜினோல்ட் குரே தயக்­கம் காட்டி வரு­கின்­றார். இத­னால் நேற்று நடை­பெ­று­வ­தாக இருந்த செய­லர்­கள் மாற்­றம் இறுதி நேரத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னின் தனது அமைச்­சிற்­குச் செய­ல­ராக நிய­மிக்­கு­மாறு கோரு­ப­வர் மீது நாடா­ளு­மன்ற சிறப்­புக் குழு­வான கோப் குழு­வின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக விசா­ரணை நடை­பெற்று அறிக்கை வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரைக் கல்வி அமைச்­சின் செய­ல­ராக அவரை நிய­மித்­தால், அந்த விசா­ர­ணைக்கு பெரும் பாதிப்பு ஏற்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதை அடுத்தே ஆளு­நர் இட­மாற்­றங்­க­ளைச் சடு­தி­யாக நிறுத்தி வைத்­தார்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக இரண்­டா­வது தட­வை­யா­க­வும் பொறுப்­பேற்­றுக்­கொண்ட ரெஜி­னோல்ட் குரே, செய­லர்­க­ளின் இட­மாற்­றத்­திற்­கான உத்­த­ரவை நேற்று விடுப்­ப­தற்கு இருந்­தார்.

வடக்கு மாகாண மாகாண கல்வி அமைச்­சின் செய­ல­ராக பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லர் சி.ஏ.மோகன்­ராஸ் மாற்­றப்­ப­டு­வ­து­டன், பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ள­ராக பயிற்சி முகா­மைத்­து­வத்­துக்கு பொறுப்­பா­க­வி­ருக்­கும் சிவ­பா­த­சுந்­த­ரம், பயிற்சி முகா­மைத்­து­வத்­துக்கு பொறுப்­பாக தெய்­வேந்­தி­ர­னை­யும் நிய­மிக்க ஆளு­நர் அலு­வ­ல­கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண பதில் முத­ல­மைச்­ச­ரும், கல்வி அமைச்­ச­ரு­மான க.சர்­வேஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­நர் குரேயை அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்­றுக் காலை சந்­தித்­தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­ல­ராக, தான் பரிந்­து­ரைப்­ப­வ­ரையே நிய­மிக்­க­வேண்­டும் என்று விடாப்­பி­டி­யாக நின்­றார். வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னால் பரிந்­து­ரைத்­த­வ­ருக்கு எதி­ராக, நாடா­ளு­மன்ற கணக்­காய்­வுக் குழு (கோப்) பணிப்­பு­ரைக்கு அமை­வாக கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி விசா­ர­ணைக் குழு நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. இந்த முதற்­கட்ட விசா­ர­ணை­யின் அறிக்கை வடக்கு மாகா­ணத் தலை­மைச் செய­ல­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

எனி­னும் இது தொடர்­பில் முழு­மை­யான மேல­திக விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய இருக்­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே நடந்த ஆரம்ப விசா­ர­ணை­யில் வடக்கு மாகாண க்கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­கள் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­னர். விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கும் குழு­வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சை சேர்ந்த உயர் அதி­கா­ரி­க­ளும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் கோரு­ப­வரை நிய­மித்­தால், விசா­ர­ணைக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்த இழு­ப­றி­யி­னால் நேற்று வழங்­கப்­பட இருந்த செய­லா­ளர் நிய­ம­னம் வடக்கு மாகாண ஆளு­ந­ரி­னால் ஒத்தி வைக்­கப்­பட்­டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி