ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரிகளிடம் கையளிப்பு!!

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்தியாவில் கோவா கப்பல்களை நிர்மாணிக்கும் பகுதியில் தயாரிக்கப்பட்ட மேற்படி கப்பலே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடற்படையின்  சிறப்பு  அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலின் கட்டளை தளபதி கப்டன் சமன் பெரேராவிடம் இந்த கப்பல் கையளிக்கப்பட்டது. இதற்கான கடற்படை சம்பிரதாய நிகழ்வுகள் இதனை தொடர்ந்து இடம்பெற்றன.  நவீன வசதிகளை கொண்ட இந்த கப்பலின் நீளம் 107.5 மீற்றர் என்பதுடன் அகலம் 13.6 மீற்றராகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி