சம்பந்தனுக்கு கைகொடுக்கும் மஹிந்த ராஜபக்ஷ!!

எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில், மஹிந்தவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமகால அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்படுகிறது.

இது வடபகுதி தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக நடந்த முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகர சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய சரியான பாடமாக அமைந்தள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்தை கொண்ட வட மாகாண சபையில் பிரச்சினைகள் வெடித்துள்ளன. கூட்டமைப்பின் செயற்பாடுளே இதற்கு காரணமாகும்.

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால், சம்பந்தனுக்கு எதிராக புதிதாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்க வேண்டாம் என மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவிலியிருக்கும் இரா.சம்பந்தனை நீக்கி விட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தினை பெற்றுக்கொள்ள கூட்டு எதிரணியினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி