கட்­டு­வ­னில் மோட்­டார் குண்­டு­கள் மீட்பு!!

வலி­கா­மம் வடக்­கில் கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்­றுத் தொட்­டி­யில் இருந்து சில மோட்­டார் குண்­டு­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

28 ஆண்டு கால­மாக இரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி இரா­ணு­வத்­தி­ன­ரால் காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் மீள கைய­ளிக்­கப்­பட்­டது.

அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில் உள்ள வீடொன்­றின் கிணற்­ற­டி­யில் உள்ள தண்­ணீர் தொட்­டிக்­குள் மோட்­டார் குண்­டு­கள் காணப்­பட்­டன.

அவை தொடர்­பில் அரு­கில் இருந்த இரா­ணுவ முகா­முக்கு வீட்­டின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­ததை அடுத்து சம்­பவ இடத்­திற்கு சென்ற இரா­ணு­வத்­தி­னர் அவற்றை பார்­வை­யிட்­ட­னர்.

கண்­ணி­வெடி அகற்­றும் குழு­வி­னர் நேற்று மாலை வந்து பார்­வை­யிட்ட நிலை­யில் இன்று அங்­கி­ருந்து குண்­டு­கள் மீட்­டுச் செல்­லப்­ப­ட­வுள்­ளன.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி