றக்பி அணிக்கு உதவிய நாமல் ராஜபக்ச!!

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநில மகளிர் றக்பி அணிக்கு பயிற்சி வழங்க இலங்கையின் முன்னாள் றக்பி வீரர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் முன்வந்துள்ளனர்.

காஷ்மீர் மகளிர் றக்பி அணி தமது விளையாட்டு உதவுமாறு ஊடகம் மூலம் தகவல் வெளியிட்டிருந்ததை அடுத்து, நாமல் ராஜபக்ச அந்த அணிக்கு உதவதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் மகளிர் அணிக்கு முதலில் பயிற்சி கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதுடன் நாமல் ராஜபக்ச, பயிற்சி குழு ஒன்றையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பயிற்சி கருத்தரங்குக்காக இலங்கையின் முன்னாள் முன்னணி றக்பி விளையாட்டு வீரரும் பயற்சியாளருமான ரோனி இப்ராஹிம் மற்றும் மகளிர் அணியின் பயிற்சியாளரான இரோஷானி பிரியங்கா ஆகியோர் நாளை காஷ்மீர் செல்ல உள்ளனர்.

அத்துடன் றக்பி விளையாட்டு வீரரும், நாமல் ராஜபக்சவின் சகோதரருமான ரோஹித்த ராஜபக்சவும் காஷ்மீர் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி