ரஷ்யா மீது பொரு­ளா­தா­ர தடை விதித்­த அமெ­ரிக்கா!!

சிரிய உள்­நாட்­டுப் போரில் சிரிய அர­சுக்கு கண்­மூ­டித்­த­ன­மான ஆத­ரவை வழங்­கு­கி­றது என்ற குற்­றச்­சாட்­டில் ரஷ்யா மீது பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­தது அமெ­ரிக்கா.

சிரி­யா­வில், சிரிய அதி­பர் அசாத்­துக்கு எதி­ரா­கப் போரா­டி­வ­ரும் ஆயு­தக் குழு­வின் பிடி­யில் உள்ள கவுட்டா, டௌமா நகர்­க­ளில் கடந்த வாரம் இர­சா­ய­ன­வி­யல் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இந்­தத் தாக்­கு­தலை சிரிய அரசே நடத்­தி­யது என்று அமெ­ரிக்கா குற்­றம் சுமத்­தி­யது. மேற்­கத்­தைய நாடு­கள் பல­வும் அமெ­ரிக்­கா­வின் குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொண்­டன. இதை­ய­டுத்து கடந்த சனிக்­கி­ழமை அமெ­ரிக்­கா­வின் தலை­மை­யில் பிரிட்­டன், பிரான்ஸ் இணைந்து சிரி­யா­வில் தாக்­கு­தல் நடத்­தின.

சிரிய இரா­ணு­வத்­துக்­குச் சொந்­த­மான ஆயு­தக் கிடங்­கு­கள், இர­சா­யன ஆயு­தம் தயா­ரிக்­கும் இடங்­கள் என்று கரு­தப்­ப­டும் இடங்­கள் தாக்கி அழிக்­கப்­பட்­டன.  இந்­தத் தாக்­கு­த­லுக்கு ரஷ்யா கடும் கண்­ட­னம் தெரி­வித்­தது.

சிரியா தொடர்ந்து இலக்கு வைக்­கப்­பட்­டால் கடும் விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்­டி­வ­ரும் என்­றும் எச்­ச­ரித்­தது ரஷ்யா. இதை­ய­டுத்தே ரஷ்யா மீது பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­தது அமெ­ரிக்கா. ரஷ்­யா­வும் அமெ­ரிக்கா மீது பொரு­ளா­தா­ரத் தடை­களை விரை­வில் விதிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி